ஒற்றுமையை வலியுறுத்தி பயிற்சி காவலர்கள் பேரணி


ஒற்றுமையை வலியுறுத்தி பயிற்சி காவலர்கள் பேரணி
x

திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி பயிற்சி காவலர்கள் பேரணி நடைப்பெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று 75-ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரெயில்வே பாதுகாப்பு படை சார்பாக ஒற்றுமை ஓட்டம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவங்கி வைத்தார். பேரணியில் திருவள்ளூர் பயிற்சி காவலர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் பஸ் நிலையம் வரை பேரணியாக சென்றனர். மீண்டும் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து பேரணி முடிவு அடைந்தது.

அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து, திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையாளர் ஏ.கே.பிரிட், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story