தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
நீலகிரி
கோத்தகிரி
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம், கோத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது, தகுதியான பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது, அதற்கான விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 60 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். முகாமில் கோத்தகிரி தாசில்தார் கோமதி, மண்டல துணை தாசில்தார் நந்தகுமார், பயிற்சி அலுவலர் நந்தகோபால், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story