ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு பயிற்சி
கொள்ளிடத்தில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில் கொள்ளிடம் வட்டார அளவிலான ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான 6 நாள் பயிற்சி நடந்தது. பயிற்சியில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, மண்டல வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சித்ரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார அளவிலான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சிகளில் வறுமை இல்லாத வாழ்வாதாரம், நலவாழ்வு, குழந்தைகளின் நலம், நீரில் தன்னிறைவு, சுத்தமான பசுமை நிறைந்த கிராம உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.