பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
x

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சியில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் ராதா வரவேற்று பேசினார். முகாமில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, ஆசிரிய பயிற்றுனர்கள் சுசீலா, கல்யாணசுந்தரம், கருத்தாளுநர் லதா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவின் கட்டமைப்பு மற்றும் பணிகள், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்தும் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குறித்தும் மற்றும் பல்வேறு பணிகள் குறித்தும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story