பணியாளர்களுக்கு பயிற்சி


பணியாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் விண்ணப்ப விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இல்லம் தேடி கல்வி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம் விரைவில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் விண்ணப்ப விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றும் பணியில் 'இல்லம் தேடி கல்வி' திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பழனி தாலுகா பகுதியை சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் பழனிசாமி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். அப்போது, விண்ணப்ப விவரங்களை பதிவேற்றும் முறை, எவ்வாறு பதிவேற்றுவது, சரிபார்ப்பது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் 270 பேர் கலந்து கொண்டனர். விரைவில் அடுத்தகட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்


Next Story