திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக பயிற்சி முகாம் நடக்கிறது. திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தாலுகாக்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயலியை பயன்படுத்துவதற்கும், பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயோமெட்ரிக் மூலம் சரிபார்ப்பு
கலைஞர் மகளிர் உரிமை திட்ட செயலியில் விண்ணப்ப படிவம் எப்படி சமர்ப்பிப்பது பற்றியும், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்தும், பயோமெட்ரிக் மூலமாக சரி பார்ப்பை உறுதி செய்வது, ரேஷன் கார்டு சரி பார்ப்பை உறுதி செய்வது, குடும்ப உறுப்பினர் பதிவு செய்வது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
மாவட்ட நிலையிலான பயிற்றுனர்கள் மாவட்டத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட களப்பணியாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி களப்பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன், சுல்தானா, உதவி ஆணையாளர் வினோத், தெற்கு தாசில்தார் புனிதவதி, வருவாய்த்துறை, மகளிர் திட்டம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.