விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒத்திகை
விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒத்திகை செங்கோட்டையில் நடத்தப்பட்டது
தென்காசி
செங்கோட்டை:
தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் தங்களையும், தங்களது உடமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது மற்றும் பிறருக்கு ஏற்படும் உயிர் ஆபத்துகளிலிருந்து எவ்வாறு மீட்பது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒத்திகை செங்கோட்டையில் நடத்தப்பட்டது. செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் கந்தசாமி முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் செல்வன் மற்றும் வீரர்கள் கொண்ட குழுவினர் இதை செய்து காண்பித்தனர். தாலூகா அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story