பயணிகள் நிழற்குடையில் மது குடிப்பதை தடுக்க வேண்டும்


பயணிகள் நிழற்குடையில் மது குடிப்பதை தடுக்க வேண்டும்
x

பயணிகள் நிழற்குடையில் மது குடிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வோண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பயணிகள் நிழற்குடைகளில் பெரும்பாலனவை இரவு நேரத்தில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது. அவர்கள் நிழற்குடையில் அமர்ந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை வைத்து விட்டு செல்வதோடு, வாந்தி எடுத்து விட்டு செல்கின்றனர். இதனால் காலை நேரத்தில் நிழற்குடையை பயணிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே பயணிகள் நிழற்குடையில் இரவு நேரத்தில் அமர்ந்து மது குடிக்கும் மது பிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story