மாநில கராத்தே போட்டியில் திருச்சி அணி சாம்பியன்


மாநில கராத்தே போட்டியில் திருச்சி அணி சாம்பியன்
x

மாநில கராத்தே போட்டியில் திருச்சி அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது

திருச்சி

குழித்துறையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திருச்சியில் இருந்து தலைமை பயிற்சியாளர் சேவியர் டேவிட் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் திருச்சி அணியினர் 150-க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதுபோல் ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் திருச்சி வீரர் அரவிந்த் பிரகாஷ் பெற்றார். இந்நிலையில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் திருச்சி மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களை பாராட்டினார்.

1 More update

Next Story