மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே துளங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 40). இவர் அதே ஊரைச் சேர்ந்த சூடாமணி மகள் கோகிலா (23) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருநாவுக்கரசு நிறுத்த முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் திருநாவுக்கரசின் கட்டுப்பாட்டை மீறி தடுமாறியது. அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story