தூத்துக்குடி 3-ம் கேட்ரெயில்வே மேம்பாலம் அருகே இணைப்புசாலை அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்


தூத்துக்குடி 3-ம் கேட்ரெயில்வே மேம்பாலம் அருகே இணைப்புசாலை அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் அருகே இணைப்புசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தின் அருகே இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரெயில்வே மேம்பாலம்

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2010-ம் ஆண்டு கலைஞர் தலைமையில் நடந்த அரசில், அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் 10 ஆண்டுகளாக பாலத்தின் தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அ.தி.மு.க அரசினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தி இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இணைப்புசாலை

இதனை தொடர்ந்து இணைப்பு சாலைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் பாலத்தின் தென்பகுதியில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசு மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story