

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசட்டி கிராமத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
யானைகள் வருவதை பார்த்த தேட்ட தெழிலாளர்கள், அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்து ஒசட்டி கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் யானைகள் நடமாட்டம் குறித்து மக்களுக்கு அறிவித்தனர்.
மேலும், வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்