உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா


உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா
x
திருப்பூர்


உடுமலை மாரியம்மன் கோவிலில் வருகிற 22-ந்தேதி ஆடிப்பெருவிழா தொடங்குகிறது.

மாரியம்மன் கோவில்

உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் ஆடிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி வருகிற 22-ந்தேதி ஆடிப்பெருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் ஆடிவெள்ளிக்கிழமையான வருகிற 22-ந்தேதி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிகால பூஜை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23-ந்தேதி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜையும், 28-ந் தேதி சர்வ ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. 29-ந்தேதி ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிகால பூஜை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

ஆகஸ்டு 1-ந்தேதி திரு ஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சவுபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம், மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நாகசதுர்த்தி விழா நடக்கிறது. 4.30மணிக்குமங்கள இசை, 4.45 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆடிப்பெருக்கு

ஆகஸ்டு 3-ம்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு ஷோடச அபிஷேகம், மகாதீபாராதனைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 5-ந்தேதி 3-வது ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிகால பூஜை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

11-ந்தேதி ஆடி மாதப்பவுர்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12-ந்தேதி ஆடிமாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சி காலபூஜை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீரீதர், செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story