ஒன்றிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது


ஒன்றிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது
x

திருப்பத்தூரில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சர்வதேச அளவிலான 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 15-ந் தேதி முதல் செஸ், ஓவியம், வினாடி- வினா ரங்கோலி, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் தேர்வு பெறும் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். அதில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.. இதில் 27 அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 120 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வயது வாரியாக 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதனை மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். மேலாளர் சாந்தா வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஒன்றிய குழு துணை தலைவர் டி. ஆர். ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலக கணக்காளர் பழனி நன்றி கூறினார்.

1 More update

Next Story