100 நாள் வேலை திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்


100 நாள் வேலை திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:47 AM IST (Updated: 14 Dec 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் தாலுகா 3-வது மக்கள் கோரிக்கை மாநாடு ஒன்றிய செயலாளர் வீரசிங்கம் தலைமையில் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா வரவேற்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், பெரம்பலூர் நகராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். முழுமையான சம்பளத்தை கொடுக்க வேண்டும். பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கறவை மாட்டுக்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் கலையரசி, மாவட்ட பொருளாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story