ஆட்டோ மீது வேன் மோதி விபத்து


ஆட்டோ மீது வேன் மோதி விபத்து
x

மானூரில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

திருநெல்வேலி

மானூர்:

மானூரை சேர்ந்தவர் சுடலை (வயது 47). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு மானூர் பஜாரில் ஓரமாக தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நெல்லையில் இருந்து வந்த வேன் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story