சென்னையில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை...!

சென்னையில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை...!
Published on

சென்னை,

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு சென்ற போது நடந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேரில் பார்வையிட்டு ரமேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொளையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விசிக நிர்வாகி படுகெலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com