வீரன் அழகுமுத்துக்கோன் ஆவண நூல் வெளியீட்டு விழா


வீரன் அழகுமுத்துக்கோன் ஆவண நூல் வெளியீட்டு விழா
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வீரன் அழகுமுத்துக்கோன் ஆவண நூல் வெளியீட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி யாதவ சங்க அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்று, ஆவண நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூல் ஆசிரியர் எஸ். பி. எஸ். சுபாஷ் சேர்வை வரவேற்றுப் பேசினார். நூலை எம்.ஈஸ்வரன் வெளியிட்டார். முதல் பிரதியை கோகுலத்தார் மக்கள் இயக்க தலைவர் ஆர். கே. கண்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோமுதாஸ், நகரச் செயலாளர் பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story