தீப்பந்தம் வெளிச்சத்தில் வசிக்கும் கிராம மக்கள்


தீப்பந்தம் வெளிச்சத்தில் வசிக்கும் கிராம மக்கள்
x

முதுகுளத்தூர் அருகே மின்வசதி இல்லாததால் கிராம மக்கள் தீப்பந்தம் வெளிச்சத்தில் வசித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே மின்வசதி இல்லாததால் கிராம மக்கள் தீப்பந்தம் வெளிச்சத்தில் வசித்து வருகின்றனர்.

மின் வசதி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சண்முகபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூலி தொழில் செய்து வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி இல்லாத தால் பெற்றோர்கள் இரவில் தீப்பந்தம் ஏந்தி மாணவர்களுக்கு உணவு ஊட்டுதல், படிக்க வைத்தல் இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலை தொடர் கதையாக உள்ளதாக கவலை தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகம் வரும் அகதிகளுக்கு தமிழக அரசு வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்த சலுகைகளில் அடிப்படை வசதிகள் சிறிதளவு கூட தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் நாம் சுதந்திரம் பெற்ற தமிழகத்தில் பிறந்தது வாழ்வது வேதனை அளிப்பதாக அந்த கிராம மக்கள் கண்ணீர் மல்க கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி சில குடும்பத்தினர் ஊரைவிட்டு காலி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கிராம மக்கள் கூறுகையில் பகல் நேரத்தில் வேலை செய்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேவர முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

நடவடிக்கை

கடந்த 1976-ம் ஆண்டில் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வருவாய்த்துறை அதிகாரிகள் மத்திய -மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ள நிலையில் தற்போது வரை மின்சார வசதி வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து முதுகுளத்தூர் தாசில்தாரிடம் கேட்டபோது ஆவணங்கள் சரி செய்து மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story