நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x

நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

பட்டா வழங்க லஞ்சம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, கங்கதேவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனக்கு சோந்தமான நிலத்திற்கு தனிப்பட்டா வேண்டி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். மேலும் இந்த விண்ணப்பத்தினை பரிந்துரை செய்ய ராஜ்குமார் கங்கதேவன் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பாலுவை நாடினார். அப்போது விண்ணபத்தினை பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் ரூ.40,000 ஆயிரம் லஞ்சம் கோடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் பாலு கேட்டார்.

கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்குமார் இதுகுறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜ்குமாரிடம் ரசாயண பொடி தரவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். மேலும் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்றனர்.

ராஜ்குமார் கிராம நிர்வாக அலுவரின் உதவியாளர் பொன்னியம்மாளிடம் பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வாங்க சொன்னதாக கூறி பொன்னியம்மாள் பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பாலு, கிராம உதவியாளர் பொன்னியம்மாள் ஆகிய 2 போரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story