

குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி மேலமங்கநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அனுசுயா சிங்காரவேலன் வரவேற்றார். குத்தாலம் வேளாண் உதவி இயக்குனர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். இதில் கிராம நிர்வாக அதிகாரி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சிவாஜி நன்றி கூறினார்.
திருக்கடையூர்
திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில், பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் தீபா முனுசாமி தலைமையில், டி. மணல்மேடு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் திலகவதி துரைராஜன் தலைமையில், மடப்புரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜின்னிசா செல்வநாயகம் தலைமையில், காலமநல்லூரில் ஊராட்சி தலைவர் நடராஜன் தலைமையில், கிள்ளியூரில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.