விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை- துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை- துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

திருவள்ளூர்

திருத்தணி உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர் கூறியதாவது-

வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின்போது ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது.

களிமண்ணால் செய்யப்பட்ட ரசாயன கலவை இல்லாத சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். பொது இடத்தில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் சிமெண்டு சீட், இரும்பு தகடு போன்றவற்றால் மட்டுமே தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அறிவுறுத்தினார்.

நிபந்தனைகளை மீறும் ஊர்வலத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story