கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதில் விதிமீறல்


கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதில் விதிமீறல்
x

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதில் விதிமீறல் நடக்கிறது என்று தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

மாவட்ட ஊராட்சி

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தின் போது மாவட்ட ஊராட்சி சார்பில் செயல்படுத்த உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், கடந்த கால செலவினங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனிம வளங்கள்

அப்போது, துணைத்தலைவர் ராஜபாண்டியன் பேசுகையில், மாவட்ட ஊராட்சிக்குழு கட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. அவர்களிடம், இதுகுறித்து மாவட்ட ஊராட்சி குழு சார்பில் விளக்கம் கேட்க வேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு விதிகளை மீறி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

முறையான நடைச்சீட்டு இன்றி அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, தேனி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டமும் ஏற்படுகிறது. இதை கண்டிப்பதோடு, கனிம வளங்கள் எடுப்பதை ஒழுங்குபடுத்த வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதேபோல் பொதுப்பணித்துறை கண்மாய்களில் குறைந்த தொகைக்கு மீன்பிடி உரிமம் ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது எனவே இந்த உரிமத்துக்கு பொது ஏலம் நடத்த வேண்டும் என்றார்.இதையடுத்து துணைத்தலைவர் வலியுறுத்திய கனிமவள பிரச்சினை மற்றும் மீன்பிடி உரிமம் தொடர்பான தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story