விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷவிழா
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷவிழா நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தீகேஸ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், வில்வம் அருகம்புல் மஞ்சள் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story