தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.,

சென்னை,

தமிழகத்தில் அக்டோபா் மாதம் தொடங்கி டிசம்பரில் வடகிழக்கு பருவமழை முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

இதற்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் 5,000 முதல் 7,000 கனஅடி நீர் செல்லும். பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்; கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் இல்லை. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கவும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story