குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்


குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்
x

ஆலங்காயத்தில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளை சேர்ந்த கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கு 5 பேர் வீதம் 135 பேருக்கு குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ந.விநாயகம் தலைமை வகித்து பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைபிரியா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள், பம்ப் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டன. பயிற்சியாளர்கள் ராஜா, மஞ்சுநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


Next Story