குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்


குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்
x

வந்தவாசியில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், கிராம குடிநீர் வழங்கும் திட்ட மாவட்ட நிர்வாக பொறியாளர் முத்துராமனின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

துணை தணிக்கையாளர் ஜெகதீசன், வட்டார இயக்க மேலாளர் சாந்தி ஆகியோர் நீரின் தரத்தை அறியும் விதம் குறித்து பேசினர்.

முகாமில், குடிநீர் ஆய்வக பணியாளர்கள், கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இவர்களுக்கு, நீரின் காரத்தன்மை, அமிலத்தன்மை, நடுநிலைத் தன்மை ஆகியவற்றை கண்டறிவது குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story