வார விடுமுறை நாளான இன்று களைகட்டிய மீன் விற்பனை


வார விடுமுறை நாளான இன்று களைகட்டிய மீன் விற்பனை
x

வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.

சென்னை,

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு இரண்டு வாரங்களாக காசிமேட்டில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் , தற்போது விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் மீன்களின் வரத்தும் அதிகளவிலையே இருக்கிறது . பெரிய விசைப்படகுகள் , நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் இன்று மீன்களைப் பிடித்து விற்பனைக்காக கரைக்கு திரும்பினர்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட இன்று அலைமோதியது. இந்த சூழலில் கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் விலை அதிகரித்துள்ளது. வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.200 அளவிற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகமாக விற்பனையாகி வருகிறது.

வஞ்சிரம் கிலோ 1300 ரூபாய்க்கும் ,சங்கரா கிலோ 350க்கும் ,தோல் பாறை கிலோ 350 ரூபாய்க்கும், தேங்காய் பாறை கிலோ 800 ரூபாய்க்கும், கடம்பா கிலோ 350 ரூபாய்க்கும் ,நெத்திலி கிலோ 200 ரூபாய்க்கும், இறால் நண்டு போன்றவை 400 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story