செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியீடு

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியீடு
Published on

சென்னை,

சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக கூறப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது.செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை டுவிட்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.மேலும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com