திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள்


திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரசேகர் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

துவார் கிராமத்தில் உள்ள மலையாளக்கருப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து கண்டவராயன்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், மலேசியா தொழில் அதிபர் பாலா முன்னிலை வகித்தனர். முன்னதாக மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், கண்டவராயன்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம், பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்அலுவலர் தனுஷ்கோடி, நகர செயலாளர் கார்த்திகேயன், நகர அவை தலைவர் ரவி, நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்கள், காரைக்குடி கதிர், காளையார்கோவில் பூமிநாதன், திருப்பத்தூர் ஹரி சாலைகிராமம் ரெட்சங்கர், காரையூர் மாணிக்கம் திரைப்பட நடிகர் மெய்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எப்.சி.எஸ். நிறுவனத்தின் மேலாளர் சரவணன் செய்திருந்தார்.


Next Story