முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:30 AM IST (Updated: 23 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சுகுணா மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலவச பட்டா, கடன்உதவி, ஓய்வூதியம், உயர்கல்வியில் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தினர் 29 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரமும், ஒருவருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரமும், வங்கி கடன் மானியமாக ஒருவருக்கு ரூ.7 ஆயிரத்து 173 என மொத்தம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 173 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story