மீனவர்கள் நலன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள்


மீனவர்கள் நலன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
x

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள் பின்வருமாறு:-

* மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும்

* 45,000 மீனவர்களுக்கு மீன்பிடி கூட்டுறவு கடன் வழங்கப்படும்.

* மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, ரூ.5000-ல் இருந்து ரூ.8000-ஆக உயர்த்தப்படும்.

* 60 வயதானவர்களுக்கு மீன்பிடி நிவாரணத்தொகை வழங்கப்படும் .

* குமரி, நெல்லை, தூத்துக்குடி நாட்டுபடகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3,700 லிட்டராக உயர்த்தப்படும்

* விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 18,000-ல் இருந்து 19,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

* நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 4,000-ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தப்படும்.

* தங்கச்சிமடம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பனில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்கப்படும்.

* மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.

* மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு தொகை, ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* 1000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

* புதிய திட்டங்களுக்காக ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.


Next Story