கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? - கரூர் நீதிமன்ற நீதிபதி கேள்வி


கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? - கரூர் நீதிமன்ற நீதிபதி கேள்வி
x

கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? என்று கரூர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்,

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது 4 பேரிடம் நீதிபதி அம்பிகா இளைஞர்கள் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா?

மாணவர்களின் சக்தியை தவறாக பயன்படுத்த வேண்டாம். கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? உண்மை எது என்று தெரியாமல் எதற்காக போராட்டம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.


Next Story