சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி


சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி
x

நாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க. அடைமானம் வைத்துவிட்டதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4வது பட்டியலை சீனா இன்று வெளியிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சினை குறித்து எப்போது வாய்திறப்பார்?. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story