மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் எப்போது..? - வெளியான புதிய அப்டேட்

கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் எப்போது..? - வெளியான புதிய அப்டேட்
Published on

மதுரை,

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் கோவையில், அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை அடுத்த மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com