கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்; பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி


கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்; பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
x

Image Courtesy : ANI

கிரிக்கெட் விளையாடியபோது பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் கோட்லா விகார் பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் இருந்த இரும்பு போஸ்ட் கம்பத்தின் அருகே விழுந்துள்ளது.

அந்த பந்தை எடுப்பதற்காக சென்ற 13 வயது சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் மயக்கமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story