நீட் விவகாரத்தில் எதற்காக தெருக்களில் போராட வேண்டும்? - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்


நீட் விவகாரத்தில் எதற்காக தெருக்களில் போராட வேண்டும்? - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
x

நீட் விவகாரத்தில் எதற்காக தெருக்களில் போராட வேண்டும் என்று ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை,

கவர்னரை விமர்சிக்கும் போக்கை ஆளுங்கட்சி கைவிட வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

"கவர்னரை விமர்சிக்கின்ற போக்கை இன்றைக்கு இருக்கிற ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போதுதான் கவர்னர்கள் அரசியலில் தலையிடுவதைப் போன்ற ஒரு சூழல் உருவாகாமல் இருக்கும்.

நீட் தேர்வை பொறுத்தவரையில் எதற்காக தெருவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தாராளமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கலாமே. நாங்கள் இதை செய்திருக்கிறோம்; கவர்னர் இதை முறையாக கடைபிடிக்கவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு செல்லலாமே. அதை விடுத்து, அரசியலாக்க வேண்டும் என்பதற்காக கவர்னரை அரசியலுக்குள்ளாக இழுப்பது தான் தமிழக அரசின் போக்காக இருக்கிறது" என்று கூறினார்.


Next Story