செந்தில்பாலாஜி கைதால் முதல்-அமைச்சர் பதற்றம் அடைவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி


செந்தில்பாலாஜி கைதால் முதல்-அமைச்சர் பதற்றம் அடைவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

அதிமுகவை யார் அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதல்-அமைச்சர். முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி.

2 ஆண்டுகளில் ரூ.30,000 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதான வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன்.

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிய நீங்கள் மக்களை போய் சந்திக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதட்டத்துடன் பேசியதற்கு காரணம் என்ன? வழக்குகளை தி.மு.க.வினர் துணிச்சலோடு சந்திக்க வேண்டும். வழக்கை சந்தித்து குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும். எங்களுக்கு பதவி முக்கியமல்ல, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அதிமுகவின் லட்சியம். அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள்.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார். அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் முறைகேடாக இயங்குகின்றன.

தமிழ்நாட்டில் திமுகவினர் ரூ.30,000 கோடியை சுரண்டியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தை நாடி குற்றமற்றவர் என நிரூபிக்கட்டும். அதிமுகவை சேர்ந்த யாரும் எந்த கட்சிக்கும் யாரும் அடிமையாக இல்லை; சொந்த காலில் நிற்கின்றவர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story