களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


x

களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதியிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பொழிந்து வருகிறது. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள அருவி-நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

களக்காடு தலையணை சுற்றுலா தளத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து ஒடுகிறது. இதையடுத்து தலையணையில் குளிக்க களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

காட்டாற்று வெள்ளம் தணிந்த பின் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கயிறுகள் கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Next Story