சதுரகிரி மலையில் மூலிகைப்பண்ணை அமைக்கப்படுமா?


சதுரகிரி மலையில் மூலிகைப்பண்ணை அமைக்கப்படுமா?
x

சதுரகிரி மலையில் மூலிகைப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரி மலையில் மூலிகைப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலிகைச்செடிகள்

வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் பல்வேறு நோய்களை குணமாக்கும் மூலிகைச்செடிகள் அதிக அளவில் இருக்கின்றன.

மனித உடலில் ஏற்படும் வெட்டு காயங்களை குணப்படுத்தும் மூலிகைகளும் இந்த மலையில் உள்ளன. மூலிகை ஆராய்ச்சி செய்பவர்களும், மேற்குத்தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மூலிகைச்செடிகளை தேடி சேகரித்து வருகின்றனர். தேன், கடுக்காய் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை சேகரிக்கும் மலைவாழ் மக்களும் மூலிகைகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ளனர்.

மருத்துவமனை

சதுரகிரி மலையில் பல்வலி பூண்டு, மகிலம்பூ மரம், வண்டுகணி மரம், நாவல், வெள்ளை நாவல், இண்டன் பட்டை, கடுக்காய், செங்கடுக்காய், கருநெல்லி, செந்நெல்லி, சிறுதண்ணி, தலைச்சுருளி, கருடர்கொடி, நாகதாழி, கொல்லம் கோவைக்கிழங்கு, சிறியா நங்கை, கடல் உறிஞ்சான் உள்பட பல்வேறு மூலிகைகள் உள்ளன.

எனவே தமிழக அரசு சார்பில் சதுரகிரி மலை அடிவாரப்பகுதிகளில் மூலிகைப்பண்ணை மற்றும் மூலிகை வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை அமைக்க வேண்டும். மலைவாழ் இனத்தை சேர்ந்த மூலிகை வைத்தியர்கள், பல்வேறு விதமான நோய்களுக்கு வைத்தியம் செய்து வருகின்றனர். மூலிகை வைத்தியம் பார்க்கும் மருத்துவமனையை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story