நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை பதவியில் மாற்றமா? - ஆர்.பி. உதயகுமார் பதில்

அதிமுகவில் எந்த இடைவெளியும் இல்லை; பிளவும் இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை பதவியில் மாற்றமா? - ஆர்.பி. உதயகுமார் பதில்
Published on

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அதிமுகவை வெற்றிகரமாக எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள்தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து பொதுக்குழு மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா வழியில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனால் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசி உள்ளார்.

அதிமுகவில் எந்த இடைவெளியும் இல்லை; பிளவும் இல்லை. அதிமுக வலிமையாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை பதவியில் எந்த மாற்றமும் ஏற்படாது. தேர்தலில் 40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com