விஷம் குடித்து பெண் தற்கொலை

கந்திலி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கந்திலி அருகே உள்ள கரம்பூரை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மனைவி காசியம்மாள் (வயது 50), கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காசியம்மாள், நேற்று வீட்டின் அருகே விஷத்தை குடித்து விட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது காசியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com