

சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி நந்தினி (வயது 27). இவர் தனது மகள்கள் காவியா (11), கவுசிகா (9), மகன் ஹரிஹரன் (7) ஆகியோருடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவர்களை உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.