ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆற்காடு
ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சரவணன் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.