தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே சின்னப்புத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்ட ரம்யா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனாலும் மது பழக்கத்தில் இருந்து மணிகண்டனால் மீள முடியவில்லை. நேற்று முன்தினம் மனைவியை சந்திக்க சென்ற அவர், மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் மனைவிைய தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற மணிகண்டன், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.