தொழிலாளி தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி அல்லிநகரம் அண்ணா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகேஸ்வரி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நாகேஸ்வரி கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த பாண்டி கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story