உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
சிவகங்கை
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பிரசாரம் சிவகங்கையில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் குடும்ப நலத்துறை சார்பில் ஒரு மாதத்திற்கு இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 15 நாட்கள் மக்களை அணிதிரட்டும் காலமாக கொண்டாடப்பட்டது. 25-ந்தேதி வரை மக்கள் தொகையினை நிலைப்படுத்தும் காலமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.
விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சத்தியபாமா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் கமலவாசன், துணை இயக்குனர்கள் தர்மர் (குடும்ப நலம்), விஜய சந்திரன் (சுகாதாரம்), மாவட்ட சித்த மருத்துவர் பிரபாகரன், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, புள்ளியியல் உதவியாளர் பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குடும்ப நல உறுதிமொழி எடுக்கப்பட்டது.