உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
கத்தில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-
உலக மக்கள் தொகை கடந்த 1897-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதியன்று 500 கோடியை தாண்டியது. மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11- ந் தேதி உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (மருத்துவம்), ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் (பொ) ஜெனிடா கிரிஸ்டியனா ரஞ்சனா உள்பட பலர் உடன் இருந்தனர்.