குடிநீர் தொட்டியில் புழுக்கள் - மாணவிகள் தர்ணா போராட்டம்


குடிநீர் தொட்டியில் புழுக்கள் - மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 7:21 AM GMT (Updated: 6 Oct 2023 7:23 AM GMT)

சேலத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள் பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story