கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீஸ் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீஸ் விசாரணை
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே ஆர்.என்.கண்டிகையை சேர்ந்தவர் கர்ணன் (வயது 47). இவரது மகள் மஞ்சு (20). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மஞ்சு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து மஞ்சுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com